Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அளித்த தகவல்…. டெம்போவை பிடித்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை….!!!

கழிவு பொருட்கள் ஏற்றி வந்த டெம்போவுக்கு அதிகாரிகள் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் சுகாதாரத்தை பேணிகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தென்கம்புதூர் பகுதியில் மினி டெம்போவில் கழிவு பொருட்கள் ஏற்றி சென்றதை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த டெம்போவை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து டெம்போ மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் டெம்போ உரிமையாளருக்கு அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Categories

Tech |