மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஆனையூர் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரிமேடு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்தது.
அதன் மீது மோதாமல் இருப்பதற்காக ராமகிருஷ்ணன் சடன் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.