பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் எம் பி ஆன மொஹ்சின் ஷாநவாஸ் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இஸ்லாமிய பாதத்தில் உள்ள காவல் நிலையத்தில் இம்ரான்கான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இம்ரான் கானின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் அரசு தலைவர்கள் வழங்கிய பரிசுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து உள்ளதாக தோஷகானா வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை அடுத்து தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக PTI ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் இஸ்லாமபாத்தில் உள்ள பாகிஸ்தானின் தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு வெளியே இம்ரான் கான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வெளியே இம்ரான் கான் கட்சி ஆதரவாளர்களால் ரஞ்சா தாக்கப்பட்டுள்ளார். தோஷகானா வழக்கில் பிரதிவாதியாக தான் ஆஜரானபோது இம்ரான் கானின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக ராஜா தனது எஃப் ஐ ஆர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பிடியை ஆதரவாளர்கள் தனது காரை அடித்து நொறுக்கிணறு மற்றும் கற்களை வீசினர் எனவும் எஃப் ஐ ஆர் தெரிவித்துள்ளார். மேலும் இம்ரான் கான் சார்பில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து இஸ்லாமாபாத் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.