Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஊட்டச்சத்து நிறைந்த “முருங்கைக்கீரை சாதம்”

தேவையான பொருட்கள் 

  • பச்சரிசி                                                   –  2 கப்
  • முருங்கைக்கீரை                              –  ஒரு கப்
  • உப்பு                                                         –  தேவைக்கேற்ப
  • உளுந்தம் பருப்பு                               –  5  டீஸ்பூன்
  • தேங்காய்த்துருவல்                        –  2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு                                                       –  1 டீஸ்பூன்
  • பூண்டு                                                     –  6 பல்
  • துவரம்பருப்பு                                      –  1/2 கப்
  • பல்லாரி                                                  –  2
  • நெய்                                                          –  4 டீஸ்பூன்
  • பொரிகடலை                                       –  4 டீஸ்பூன்
  • வத்தல்                                                     –  10
  • எண்ணை                                               –  தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் அரிசி மற்றும் பருப்பு இரண்டையும் சேர்த்து ஒன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முருங்கை கீரையையும் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.

சுத்தம் செய்து வைத்துள்ள அரிசி மற்றும் பருப்புடன்  உப்பும் தண்ணீரும்  சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வரும்வரை காத்திருந்து இறக்கிவிடவும்.

பல்லாரியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பூண்டை இடித்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் உளுந்தம் பருப்பு போட்டு இடித்து வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கவும்.

அதனுடன் பொடிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மேலும் நன்றாக வதக்கவும்.

பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை கீரையை சேர்த்து மேலும் வதக்கவும்.

நன்றாக வதங்கிய பின்னர் சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும்.

பரிமாறும் முன் நெய் சேர்த்துக் கொண்டு பரிமாறவும்.

Categories

Tech |