இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகளுக்கு சொந்தமாக மொபைல் போன் இருக்கிறது. அத்தகைய சூழலில் அவர்களிடம் ஏடிஎம் கார்டு மற்றும் யுபிஐ ஆப் வசதி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் அது இனி சாத்தியமாகும். ஏனென்றால் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா குழந்தைகளுக்கான சிறப்பு அம்ச கணக்கை கொண்டு வந்திருக்கிறது. இந்த வங்கி கணக்கை அவர்களுக்காக நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இந்த கணக்கில் பணம் செலுத்துவதற்கான வரம்பும் நிர்ணயிக்கப்படும் அதனால் உங்கள் பிள்ளைகள் தேவை இல்லாமல் செலவு செய்ய மாட்டார்கள்.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இரண்டு வகையான கணக்குகள் தொடங்கப்படலாம் முதலாவது பெஹ்லா கதம் இரண்டாவது பெஹ்லி உதான். இதில் பல அம்சங்களை sbi வழங்கி வருகிறது இதன் கீழ் தாய் தந்தை அல்லது பாதுகாவலர் எந்த வயதிலும் மைனர் குழந்தைகளுடன் கூட்டுக் கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். மேலும் இந்த கணக்கை பெற்றோர் பாதுகாவலர் அல்லது குழந்தையால் தனித்தனியாக இயக்கவும் முடிகிறது ஏனென்றால் இந்த கணக்கில் உங்களுக்காக ஏடிஎம் கார்டு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த காது மைனர் குழந்தை மற்றும் பாதுகாவலர் பெயரில் வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் 5000 ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் மொபைல் பேங்கிங் வசதியும் இதில் இருக்கிறது அதே சமயம் நீங்கள் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் 10 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த கணக்கை தொடங்கி கொள்ளலாம். ஆனால் அவர்கள் இந்த கணக்கில் கையொப்பமிட வேண்டும் அந்த குழந்தைகளை இந்த கணக்கை இயக்க முடியும்.