தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 23ஆம் தேதி அசாம் முதல்வர் ஹிமன்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பதிவில் ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்த அசாம் அரசு முடிவு எடுத்திருப்பதாக உறுதி செய்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வானது 2022 ஜூலை 1 முதல் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வரின் இந்த ட்விட்டர் பதிவுக்கு ஊழியர்கள் தரப்பிலிருந்து பொதுமக்கள் தரப்பிலிருந்தும் நன்றியும் வாழ்த்துக்களும் கூறப்பட்டு வருகிறது. மேலும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என ட்வீட் செய்திருக்கின்றனர். மாநில அரசு ஊர்க்காவல் படையினரின் தினசரி பணிக்கொடையை 300 ரூபாயிலிருந்து 767 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.
அகவிலைப்படி உயர்த்திய பின் ஊர்க்காவல் படையின் சம்பளம் 23,010 ஆக இருக்கிறது இந்த உயர்வை உடனடியாக அரசு அமல்படுத்தவும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பற்றி அசாம் முதல்வர் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, அஸ்ஸாம் காவல்துறையின் முக்கிய பிரிவான ஊர்க்காவல் படையினர் மாநிலத்தில் சட்ட அமைப்புகளை பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். சுமார் 24000 ஊர்க்காவல் படையினரின் கோரிக்கையை மனதில் கொண்டு அவர்களின் தினசரி உதவித்தொகையை நாங்கள் அதிகரித்து இருக்கிறோம் என கூறியுள்ளார். முன்னதாக உத்திர பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் ஒடிசா மாநில அரசுகள் டி ஏ மற்றும் டி ஆர் ஐ உயர்த்தியது குறிப்பிடத்தக்கதாகும்.