Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்த மக்கள்…. வெறிச்சோடி காணப்படும் சென்னை மாநகரம்….!!!!

சென்னையில் உள்ள பல பகுதிகளில் சாலை வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சென்றனர். இதனால் கடந்த சில நாட்களாக சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று கோயம்பேடு, பிரதான சாலை, அண்ணா சாலை, பெரியார் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் வாகனங்கள் எதுவும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய வார இறுதி விடுமுறையால் முன்கூட்டியே பலர் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டனர். இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

Categories

Tech |