Categories
அரசியல்

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்…. சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம்…. வீட்ல ட்ரை பண்ணி பாருங்க…..!!!!

இந்தியாவில் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, இனிப்புகள் பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இதில் குறிப்பாக தீபாவளி பண்டிகை என்றாலே பலகாரங்கள் செய்வதில் தான் வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் வீட்டில் உள்ள அனைவருமே இனிப்புகளை சாப்பிட்டு மகிழ்ந்தாலும் சர்க்கரை நோயாளிகளால் இனிப்புகளை சாப்பிட முடியாது‌‌. எனவே அவர்களின் கவலையை போக்கும் விதமாக சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடக்கூடிய சில இனிப்புகளை எப்படி செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

நட்ஸ் அல்வா:

பொதுவாக  நட்ஸில் ஏராளமான சத்துக்கள் இருப்பதால் அனைவருமே நட்ஸ் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான். இந்த அல்வாவை தயாரிப்பதற்கு வறுத்த பாதாம் மற்றும் வேர்க்கடலை ஒரு கப், பிஸ்தா, வால்நட்ஸ் அரை கப், பால் இரண்டு கப், ஸ்டீவியா சர்க்கரை 2 டீஸ்பூன் போன்றவற்றை ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு ரெடியாக வைத்துள்ள நட்ஸ்கள் அனைத்தையும் லேசாக வறுத்து மிக்சியில் தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைக்க வேண்டும்.

அதன்பிறகு  அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எடுத்து வைத்திருக்கும் பாலை அதில் ஊற்ற வேண்டும். பால் நன்றாக கொதித்த பிறகு அடுப்பை குறைவான தீயில் வைத்துவிட்டு அரைத்து வைத்திருக்கும் நட்ஸை அதில் ஊற்றி அல்வா பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறிவிட்டு தேவையான அளவு ஸ்டீவியா சர்க்கரையை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவைப் பட்டால் இறக்கும்போது 2 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

2. ஆரஞ்சு பர்ஃபி:

இதை செய்வதற்கு ட்ரை அத்தி அரை கப், 1 லிட்டர் பால், சிறிதளவு ஏலக்காய் தூள், சிறிதளவு நட்ஸ் வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் அத்திப்பழத்தை சிறிதளவு வெந்நீரில் ஊறவைத்து நன்கு மையாக அரைத்து விட்டு, அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எடுத்து வைத்த பாலை காய்ச்ச வேண்டும். அதன் பிறகு அரைத்து வைத்த அத்திப்பழ பேஸ்ட்டை அதில் ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். ‌ இது ரெடியான பிறகு சிறிதளவு ஏலக்காய் தூள் மற்றும் நட்ஸ்களை நன்றாக சேர்த்து கிளற வேண்டும்‌. அதன்பிறகு நீங்கள் விருப்பப்பட்ட அச்சில் வைத்து எடுத்து விட்டால் பர்பி ரெடியாகிவிடும்.

3. ஸ்ரீகண்ட்:

இதை செய்வதற்கு கெட்டி தயிர் இரண்டு கப், ரோஸ் வாட்டர் இரண்டு டீஸ்பூன், தேன் அல்லது ஸ்டீவியா சர்க்கரை ஒரு ஸ்பூன், சிறிதளவு பன்னீர் ரோஜா இதழ்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு எடுத்து வைத்த தயிரில், ரோஸ் வாட்டர், பன்னீர் ரோஜா இதழ்கள், தேன் அல்லது ஸ்டீவியா சர்க்கரை போன்றவற்றை நன்றாக சேர்த்து கலக்கினால் க்ரீமியான ஸ்ரீ கண்ட் ரெடியாகிவிடும்.

பேரிச்சம் பழம் லட்டு:

இதை செய்வதற்கு ஒரு கப் கொட்டை இல்லாத பேரிச்சம்பழம், தேங்காய் துருவல் அரை கப், பாதாம் அரை கப், வேர்க்கடலை 1/2 டீஸ்பூன் போன்றவற்றை எடுத்துக்கொண்டு, எடுத்து வைத்த பேரிச்சம் பழத்தை நன்றாக நீரில் ஊற வைத்துவிட்டு மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் வேர்க்கடலை மற்றும் தேங்காய் துருவல் போன்றவற்றை கலந்து கைகளில் நெய் தடவி உருண்டையாக பிடித்தால் சுவையான பேரிச்சம் பழ  லட்டு ரெடி ஆகிவிடும்.

Categories

Tech |