சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் சொதப்பியதால் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளார்கள்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவிற்கு வந்த சில வருடங்களில் முன்னணி நடிகராக மாறினார். பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இவர் இடையில் சில தோல்விகளை சந்தித்தார். இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து டான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழ் மற்றும் தெலுங்கு பிரின்ஸ் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் நேரடி தெலுங்கு சினிமா உலகில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கின்றார்கள்.
ஏனென்றால் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி திரைப்படத்திலும் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்கள். இத்திரைப்படங்களும் நேரடியாக தெலுங்கில் வெளியாக உள்ளது. பிரின்ஸ் திரைப்படம் சொதப்பியதால் வாத்தி மற்றும் வாரிசு திரைப்படத்திற்கும் இதே நிலைமை வந்துவிடக்கூடாது என்ற கழகத்தில் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்கள் இருப்பதாக இணையத்தில் தெரிவித்து வருகின்றார்கள்.