Categories
அரசியல்

தீபாவளி பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி….? டாக்டர் அளித்த விளக்கம்….!!!!

தீபாவளி பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து டாக்டர் அளித்த விளக்கம்:

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட இருக்கும் நிலையில் தீபாவளி பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து டாக்டர் பிரவீன்குமார் மற்றும் தீயணைப்பு அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து டாக்டர் பிரவீன்குமார் கூறியதாவது, நாளை பட்டாசு வெடிக்கும் போது நீண்ட ஊதுபத்தியை பயன்படுத்த வேண்டும். மேலும் பட்டாசு வெடிக்கும் போது கண்களில் காயம் எதுவும் ஏற்பட்டால் நீரை கொண்டு கண்களை கழுவ வேண்டும்.

கண்களை மருத்துவரிடம் பரிசோதனை செய்யாமல் களிம்பு மருந்துகளை போட கூடாது. பட்டாசு வெடிக்கும் போது கண்ணாடி அணிந்து கொள்வது பாதுகாப்பானது. மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறையினர் வெங்கடேசன் கூறியதாவது, பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் போது திறந்த வெளிகளில் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |