நறுவி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறந்த படத்தை ரசிகர்கள் வெற்றிபெற செய்வார்கள் என பேசியுள்ளார் பா ரஞ்சித் அவர்கள்
செல்லா நடிப்பில் வெளிவர இருக்கும் நறுவி திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பா ரஞ்சித் இயக்குனர் அவர்கள் பேசிய பொழுது “பாசிச வெறிகொண்டு சிறுபான்மையினரை இந்தியாவில் கொடுமைப்படுத்தும் சூழலில் நாம் இன்று இவ்விழாவில் இருக்கிறோம். இப்படத்தின் இயக்குனரை போலவே நானும் அட்டகத்தி திரைப்படத்தின் போது மிகவும் பதற்றமாகவே இருந்தேன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அனைவரும் வலிமைை மிக்கவர்களாக மாறுவார்கள் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்விடத்தில் படத்தை எடுப்பது மிகவும் சுலபமான விஷயம். ஆனால் படத்தை வெளியிடுவது மிகவும் கடினமான ஒன்று. தடைகள் அனைத்தையும் தாண்டி இத்திரைப்படம் நிச்சயம் வெற்றியை கொடுக்கும். யாரும் யாரையும் நம்பி இங்கு பிறக்கவில்லை. அவரவர் தகுதிக்கு தகுந்தார்போல் வெற்றி வாய்ப்பை பெறுகின்றனர்.
இத்திரைப்படத்தில் விஷுவல் அனைத்தும் மிகவும் பிரம்மாண்டமாக வந்துள்ளது. தகுதியான படத்தை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் வெற்றி பெற செய்வார்கள். ஊடகங்களும் சிறந்த படங்களை பாராட்டும். நறுவி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்”. இவ்வாறு பேசினார்.