இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும். அதன் பிறகு 2-வது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், 3-வது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலும் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 11-வது தவணைத் தொகை விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டது.
அதன்படி 21,000 கோடி ரூபாய் நிதி உதவியை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அரசு அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து 12-வது தவணை தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணம் உங்களுக்கு வரவில்லை என்றால் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான [email protected] என்ற முகவரியில் புகார் தெரிவிக்கலாம். அதோடு 155261, 1800115526, 011-23381092 என்ற தொலைபேசி எண்ணுக்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் 12-வது தவணை தொகை குறித்து உங்களுடைய புகாரை தெரிவித்து பிறகு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.