Categories
மாநில செய்திகள்

இதை சட்டப்படி சந்திக்க நான் ரெடி!…. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்…..!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டது. அப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முன்னாள் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் போன்றோர் குற்றம் செய்தவர்கள் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதன் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஒரு அமைச்சராக நான் என் கடமையை செய்த நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருக்கிறார்.

Categories

Tech |