Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியிலும் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்”…. சர்தார், பிரின்ஸ் வெளியாகியும் இதற்குத்தான் ஹவுஸ்புல்….!!!!!!

தீபாவளிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. சென்ற மாதம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மூன்று வாரங்கள் கடந்து தற்போதும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது.

தற்போது தீபாவளி ரிலீஸாக சர்தார், பிரின்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் ஹவுஸ்புல் ஆகாமல் இருக்கின்றது. ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ் திரைப்படம் பல திரையரங்கில் 90% வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. விடுமுறை நாட்களில் வசூல் சிறப்பாக இருப்பதால் படம் எப்படியும் 500 கோடியை கடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.

Categories

Tech |