நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தூய்மை நகரமாக மாற்றுவதற்கான பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் மக்கும் குப்பையை வைத்து பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் தற்போது விகே புரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் புது முயற்சியாக 4 அடி உயரத்தில் குப்பைகளை வைத்து யானை ஒன்றை உருவாக்கி நகராட்சி அருகில் வைத்துள்ளனர். இது பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.