சென்னையிலிருந்து நேற்று காரில் பா.ம.க தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி திண்டிவனம் வந்துகொண்டிருந்தார். திண்டிவனம் அருகில் ஒலக்கூர், பாதிரி எனும் இடத்தில் கார் சென்றபோது முன்னாள் சென்ற கார் திடீரென்று பிரேக் அடித்ததில், அதன் மீது சவுமியா அன்புமணி சென்ற கார் மோதியது. அதன்பின் பின்னால் பாதுகாப்பிற்காக வந்தகார் சவுமியா அன்புமணி சென்ற கார் மீது வேகமாக மோதியது.
அத்துடன் அதன் பின்னால்வந்த மேலும் இரண்டு கார்களானது மோதி கொண்டது. அதன்பின் அருகிலுள்ள அவர்களுக்கு சொந்தமான கல்லூரியிலிருந்து மாற்று கார் வரவழைக்கப்பட்டு, சவுமியா அன்புமணி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஒலக்கூர் காவல்துறையினர் விபத்துக்குள்ளான 5 கார்களையும் மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.