Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மருத்துவர்கள் போராட்டம் : ”பணியிடை மாற்றம் இரத்து” நீதிமன்றம் அதிரடி …!!

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் பிற மாதங்களில் இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெங்கு காய்ச்சல் சிகிச்சை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. அதே நேரம் அரசு பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரசு மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப பட்டது.

அரசின் பணியிட மாற்ற உத்தரவை எதிர்த்து பாலசுப்பிரமணியன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு நீதிபதிஆனந்த வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணை நடைபெற்ற நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள்,பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதில் அத்தியாவசிய பணியில் உள்ள அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று கூறிய நீதிபதிகள்  மருத்துவர்களின்கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |