தமிழக முழுவதும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பல மக்களும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பேருந்துகள் மற்றும் ரயில்களில் மக்களின் கூட்டம் அலைமோதியது. ஆனால் திங்கட்கிழமை தீபாவளி முடிந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் வேலை நாட்கள் என்பதால் தீபாவளியன்று பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல வேண்டும் என கவலையில் இருந்தனர்.
அதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில் அரசு தீபாவளி மறுநாளான இன்று அதாவது அக்டோபர் 25ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் பொது விடுமுறை அளித்துள்ளது. எனவே இன்று தமிழக முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.