Categories
தேசிய செய்திகள்

பட்டாசுக்காக கொலை செய்த சிறுவர்கள்…. தீபாவளியில் பகீர்…!!!!

நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இந்நிலையில் மும்பை சிவாஜி நகரைச் சேர்ந்த சுனில் சங்கர் (21) என்ற இளைஞர், நேற்று 12,14,15 வயதுடைய 3 சிறுவர்கள் கண்ணாடி பாட்டிலில் வெடி வெடிப்பதை தடுத்துள்ளார்.

இதனால் வாக்குவாதம் முற்றவே சிறுவர்களில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை வைத்து அந்த இளைஞரை சரமாரியாக குத்தியுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த இளைஞர் உயிரிழக்கவே, போலீசார் 2 சிறுவர்களை கைது செய்துள்ளனர். ஒரு சிறுவர் தப்பி விட்டார்.

Categories

Tech |