பீகார் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் கேதர்நாத் பாண்டே. மூளை ரத்தகசிவால் பாதிக்கப்பட்ட கேதர்நாத், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 79. பீகார் மேல்-சபை எம்.எல்.சி.யாக 4 முறை கேதர்நாத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி உள்ளார். கேதர்நாத்தின் மறைவுக்கு பீகார் மாநில கவர்னர் பாகு சவுகான், முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Categories