நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் வெளிநாடுகளுக்கு தேன் நிலவு பயணம் மேற்கொண்டார்கள். திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் அம்மா அப்பா ஆகி உள்ளதாக இன்ஸ்டாகிராம் மூலம் அதிகாரப்பூர் வமாக குழந்தைகளுடன் இருவரும் இருக்கும் படங்களையும் பகிர்ந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் பெறும் பிரச்சினையாக உருவெடுத்தது.
பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே இந்த ஜோடி இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் இன்று தனது இரட்டை குழந்தைகளுடன் தலை தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் குழந்தைகளை ஏந்தியப்படி தீபாவளி வாழ்த்தை தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.