தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக திரை உலகத்திற்கு அறிமுகமானார். வருங்காலங்களில் உச்ச நடிகர்கள் லிஸ்டில் இணைந்தாலும் ஆச்சரியம் இல்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன் பல வருடங்கள் முன்பு டிவி ஷோவில் இருந்தார். அப்போது சில நடிகர்களை கலாய்த்து அவர் பேசியுள்ளார். அந்த லிஸ்டில் சிம்புவும் உள்ளார்.
அந்த வீடியோவை தற்போது பலரும் சேர் செய்து வருகின்றனர். இது குறித்து சிம்பு சில வருடங்களுக்கு முன்பு பேசி இருந்தார். அதாவது, சிவகார்த்திகேயன் உழைத்து அந்த இடத்திற்கு வந்துள்ளார். அவர் வெற்றியில் எனக்கும் சந்தோஷம். நானே போன் செய்து பாராட்டி உள்ளேன். உங்கள் சண்டையில் என்னை இழுக்காதீர்கள் என்று தெரிவித்திருந்தார். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.