Categories
அரசியல் மாநில செய்திகள்

கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி நேரில் ஆய்வு – அதிரும் ADMK தலைகள் ..!!

கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொடநாடு கொலை,  கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் இதுவரை நடத்திய விசாரணை ஆவணங்கள் சில தினங்களுக்கு முன்பு உதகை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  சிபிசிஐடியானது விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிபிசிடியானது கொடநாடு பங்களா இருக்கக்கூடிய பகுதிகளில்  விசாரணையை துவக்கி உள்ளது.

கொடநாடு பங்களாவில் தொடர்ந்து பணிபுரியக்கூடிய கணக்காளர் , மேலாளரிடம்  விசாரணையை மேற்கொண்டு உள்ளன. கொடநாடு பங்களா மேலாளர் நடராஜனிடம் 5 மணி நேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடநாடு வழக்கு விசாரணை வர உள்ளதாகவும், எனவே மேலாளர் மற்றும் காசாளர் யாரும் வெளியூருக்கு செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கொடநாடு கொலை கொலை வழக்கானது இறுதி கட்டத்திற்கு சென்றுள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.

Categories

Tech |