Categories
மாநில செய்திகள்

“தீபாவளியை சீர்குலைக்க சதி திட்டம்”…. தமிழக-கேரள எல்லையை பூட்டி சீல் வைங்க…. முதல்வருக்கு கோரிக்கை…..!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று சிலிண்டர் வெடித்து பயங்கர கார் விபத்து ஏற்பட்டதில் ஜமீஷா முபின் (23) என்ற வாலிபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப் பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை கார் வெடித்து பயங்கர விபத்தை ஏற்பட்டதில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து சந்தேகப்படும்படியாக நடந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது‌. கொரோனா பாதிப்பிற்கு பிறகு நடப்பாண்டில் மக்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் நிலையில், மக்களின் மகிழ்ச்சியை சீர்குலைப்பதற்காகவே இந்த விபத்து நடந்துள்ளது போன்று தெரிகிறது. எனவே இந்த விபத்தை தற்செயலாக நடந்தது என்று கருதி விடக்கூடாது.

இந்த விபத்து நடைபெற்ற பிறகு சென்னையிலிருந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் வீட்டில் ஏற்கனவே வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளான காரிலும் வெடிபொருட்கள் தயாரிப்பதற்கான பொருட்கள் அனைத்தும் இருந்துள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த வெடி விபத்தில் நூற்றுக்கணக்கான பேர் கொல்லப்பட்டனர். இந்த விபத்து நடந்து  கிட்டத் தட்ட 15 வருடங்களாக கோவை மாநகரின் பொருளாதாரமே சீர்குலைந்து விட்டது. அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு பீதி நிலவியது.

தற்போது மத மோதல்கள் மாநிலத்தில் இல்லை என்றாலும், உயிரிழந்தவரின் காரில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் இருந்தது சதி திட்டத்தை தீட்டும் நோக்கில் தான் வைத்திருந்ததாக கருதப்படுகிறது. இவருடைய வீட்டிலும் வெடிகுண்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது எப்படிப்பட்ட கலவரத்தை உண்டாக்குவதற்கு மற்றும் வன்முறையை கையாள்வதற்காக வைத்திருக்கப்பட்டது என்ற உண்மையை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நெஞ்சுரத்துடன் செயல்படவில்லை என்றால் முதலுக்கே மோசம் போய்விடும். நம்முடைய மாநிலத்தை தீவிரவாத அமைப்பின் புகலிடமாக மாற்றுவதற்கு தற்போது இருக்கும் அரசாங்கம் எவ்வித இடமும் கொடுக்கக் கூடாது. மேலும் தமிழக மற்றும் கேரள எல்லையை உடனடியாக பூட்டி சீல் வைப்பதோடு என்ஐஏ அதிகாரிகளும் தீவிர சோதனை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |