Categories
தேசிய செய்திகள்

உள்ள வராதீங்க… அனுமதிக்காத மருத்துவர்கள்… தெருவோரம் குழந்தையை பெற்ற பெண்..!

உத்தரப்பிரதேசத்தில் பேறுகாலத்துக்காக வந்த பெண் தெருவோரம் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பரைச் நகரில் (Bahraich) இருக்கும் அரசு மருத்துவமனைக்கு வெளியே தான் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. ஆம், நேற்று இரவு நிறைமாதக் கர்ப்பிணிப்பெண் ஒருவர் வலி தாங்க முடியாமல் பேறுகாலத்துக்காக வந்துள்ளார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அந்தப் பெண்ணை உடனே மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் நேரம் கடத்தி அலட்சியம் செய்துள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் வேறு வழியில்லாமல் பேறுகால வலி ஏற்பட்ட அந்தப் பெண், தெருவோரத்தில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மருத்துவமனையின் தலைமைக் கண்காணிப்பாளர் டி. கே சிங், கூறுகையில், குறிப்பிட்ட நேரத்தில் பணியில் இருந்தும் பெண்ணுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |