Categories
அரசியல்

அம்மாடியோ….. தீபாவளிக்கு இத்தனை ஆயிரம் கோடி தங்கம் வியாபாரமா?…. வெளியான ரிப்போர்ட்….!!!!

இந்தியாவில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தீபாவளி பண்டிகையின் போது தங்க நகை வியாபாரம் களைகட்டி உள்ளது.தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விற்பனை 25 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது மொத்த வர்த்தகம் 45 ஆயிரம் கோடி என்றும் அதில் தங்கம் மட்டும் 25 ஆயிரம் கோடி என்றும் மற்ற பொருட்களின் விற்பனை 20000 கோடி எனவும் கூறப்படுகிறது.கடந்த இரண்டு நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி மட்டுமே 25 ஆயிரம் கோடி விற்பனையாகியுள்ளது. இது மிகப்பெரிய சாதனை என்று அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |