Categories
மாநில செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு கைதியுடன் முபினுக்கு தொடர்பா ? பரபரப்பு தகவல் !!

கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு,  புலன் விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கூடுதலாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இந்த புலன் விசாரணையானது மாவட்டத்தை விட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு செல்ல வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. அதன் அடிப்படையில் மூன்று தனிப்படைகள்  அமைத்து ஒன்பது தனி படைகள் தற்போது புலன் விசாரணையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு சம்பவத்தின் அடிப்படையில் கைதான மூன்று நபர்களில் ஒருவரான முகமது அசாருதீன் NIA  அதிகாரிகளால்  விசாரணைக்குட்படப்பட்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

முகமது அசாது அசாருதீனை தற்பொழுது கார் வெடி விபத்தில் இருந்த ஜமேசா முபின்  கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சென்று சந்தித்ததாக கூறப்படுகிறது. சிறையில் உள்ள வருகை பதிவேட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

Categories

Tech |