Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே! பட்டாசுகள் வெடித்ததில் ஏற்பட்ட புகைமூட்டம்….. மூச்சு திணறலால் குழந்தைகள் பாதிப்பு….. அதிர்ச்சி தகவல்…..!!!!!

தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை ஆனது சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகையின் போது ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் அதை எல்லாம் யாருமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இந்நிலையில் தலைநகர் சென்னையில் அதிக அளவில் பட்டாசுகளை வெடித்ததால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட புகை முட்டத்தினால் சென்னை முழுவதும் இருப்பதால் கடுமையான மூச்சு திணறல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த மூச்சு திணறல் காரணமாக சில குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சென்னையில் உள்ள காற்று தரக் குறியீட்டின் பிஎம் 2.5 அளவானது, ஆலந்தூரில் 230 ஆகவும், அருகம்பாக்கத்தில் 222 ஆகவும், காந்திநகர் எண்ணூரில் 242 ஆகவும், கொடுங்கையூரில் 188 ஆகவும், மணலியில் 224 ஆகவும், மணலி கிராம பகுதியில் 266 ஆகவும், ராயபுரத்தில் 243 ஆகவும், வேளச்சேரி 195 ஆகவும் இருக்கிறது. இது தவிர மற்ற பகுதிகளில் சற்று பரவாயில்லை என்று கூறப்படுகிறது. மேலும் நேற்று தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடித்த போது ஏற்பட்ட புகைமூட்டமானது இன்று வரை மறையாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Categories

Tech |