Categories
தேசிய செய்திகள்

3 வயது சிறுமி பலாத்காரம்… வாஷ்ரூமில் பார்த்து அதிர்ந்த பெண்… 4 குழுக்கள் அமைத்து தேடும் போலீசார்.!

உத்தரபிரதேசத்தில் திருமண மண்டபத்தின் குளியலறையில் 3 வயது சிறுமி அடையாளம் தெரியாத இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டத்தின் போகான் பகுதியில் இந்த சம்பவம் புதன்கிழமை இரவு  நடந்துள்ளது. ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள சிறுமி தனது பெற்றோருடன் வந்திருந்தாள். அவள் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தாள், பின்னர் காணாமல் போனாள், ஆனால் அவள் இல்லாததை பெற்றோர்கள் கவனிக்கவில்லை. இதையடுத்து திருமணத்திற்கு வந்த ஒரு பெண் விருந்தினர் வாஷ்ரூமுக்குச் சென்றபோது, ​​ அந்த சிறுமி தரையில் படுத்துக் கிடப்பதைக் கண்டார். இதனால் அவர் அதிர்ச்சியடைந்து போய் அங்கிருந்தவர்களிடம் இதனை தெரிவித்தார். அதை தொடர்ந்து காவல்துறையினரிடம் தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதலில் அந்த சிறுமியை பார்த்த பெண் கூறுகையில், நான் அங்கு செல்லும் போது ஒரு இளைஞன் வாஷ் ரூமில் இருந்து வெளியே வருவதைக் கண்டேன் என்று கூறினார். இதனிடையே அந்த சிறுமி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

மெயின்பூரி காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அஜய் குமார் இது குறித்து கூறுகையில், சிறுமியின் நிலை சீராக உள்ளது என்றும், மருத்துவ பரிசோதனையில் கற்பழிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் விசாரணைக்காக ஒரு டஜன் நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருமண மண்டபத்திற்குள் 8 சி.சி.டி.வி கேமராக்கள் நிறுவப்பட்டிருந்தாலும், பதிவு செய்வதில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதால் காட்சிகள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “இந்த விவகாரத்தை விசாரிக்க நாங்கள் 4 குழுக்களையும் உருவாக்கியுள்ளோம். மேலும் அவரைப் பார்த்த பெண் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் அதன் ஓவியத்தை தயாரித்து குற்றவாளிகளை கைது செய்வோம்,” என்று அவர் கூறினார்.

அதேபோல சந்தேக நபரைப் பற்றிய துப்புகளைப் பெறுவதற்காக விழாவின் போது வீடியோகிராஃபர் பதிவு செய்த வீடியோக்களையும் போலீசார் பார்த்து வருகின்றனர்.

Categories

Tech |