மியான்மரில் கச்சின் சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்றுள்ளது.
மியான்மர் நாட்டில் கச்சின் மாநிலத்தில் அங் சங் சூ தலைமையிலான அரசு நிர்வாகம் செயல்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது முழு கட்டுப்பாட்டும் ராணுவத்தின் கீழ் சென்றுள்ளது. இந்த சூழலில் மியான்மரின் கச்சின் மாநிலத்தில் கச்சின் இன சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசை கலைஞர்கள் அமைப்பினர் பொதுமக்கள் என 400 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில் திடீரென மியான்மர் ராணுவம் சார்பில் வான்வழி தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இதில் பாடகர்கள் இசை கலைஞர்கள் பொதுமக்களும் அடங்குவர் இந்த நிலையில் இந்த ராணுவ ஆட்சி முறைக்கு வந்து பின் நடைபெற்ற பெரிய மற்றும் முதல் வான்வழி தாக்குதலாக இது கருதப்படுகின்றது. ஆனால் இது பற்றி மியான்மர் ராணுவம் மற்றும் அரசு ஊடகங்கள் மௌனம் சாதித்து வருகின்றார்கள். மேலும் மியான்மரின் அட்டூழியங்கள் பற்றி விரிவான ஆலோசனைக் கூட்டம் தென்கிழக்கு ஆசிய வெளிநாட்டு மந்திரிகள் சார்பில் நடைபெற இருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று உள்ளது.