Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யார் முதலில் போவது….? “போட்டி போட்டுக் கொண்டு சென்ற தனியார் பேருந்துகள்”…. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபத்து…!!!!!

போட்டி போட்டுக் கொண்டு இரண்டு தனியார் பேருந்துகள் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டதில் ஆறு பேர் படுகாயமடைந்தார்கள்.

கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி தனியார் பேருந்து சென்ற 22-ம் தேதி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செக்கண்ணன் என்பவர் ஓட்டினார். இந்த பேருந்துக்கு பின்னால் கரூரில் இருந்து திண்டுக்கலுக்கு மற்றொரு தனியார் பேருந்து சென்றது. இந்த பேருந்தை சண்முகம் என்பவர் ஓட்டினார். இரண்டு பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு சென்றபோது முன்னாள் சென்ற பேருந்து டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

இதனால் பின்னால் வந்த மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் பயணித்த பழனியப்பன், பாலகிருஷ்ணன், காளிதாஸ், அர்ஜுனா, பால்ராஜ், புஷ்ப ராஜா உள்ளிட்ட ஆறு பேர் படுகாயமடைந்தார்கள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்‌, தனியார் பேருந்து டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |