Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறுமி தற்கொலை வழக்கு…. காதலன் அதிரடி கைது…. தாயின் பரபரப்பு புகார்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை கழுவன்திட்டை காலணியில் ரதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஶ்ரீசுமா மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கணவர் பிரிந்து சென்றதால் ஸ்ரீசுமா தனது இரண்டு மகள்களுடன் மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வருகிறார். இதில் இரண்டாவது மகள் அக்ஷயா(16) பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு செண்டை மேளம் இசைக்க சென்றுள்ளார். இந்நிலையில் செண்டை மேளம் இசைக்க வந்த சஜின் என்பவருடன் அக்ஷயாவுக்கு விளக்கம் மேற்பட்ட அது காதலாக மாறியது.

இதுகுறித்து அறிந்த இரு விட்டாரும் அக்ஷயாவுக்கு 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து வைக்கலாம் என முடிவெடுத்தனர். கடந்த 16-ஆம் தேதி சஜின் தனது காதலியை கோவிலுக்கு அழைத்துள்ளார். அதற்கு அக்ஷயா மறுப்பு தெரிவித்ததால் சஜின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனை அடுத்து போனில் அக்ஷயா தனது காதலனை தொடர்பு கொண்டு கோவிலுக்கு தான் வருவதாக கூறியுள்ளார்.

பின்னர் தனது வீட்டில் விஷம் குடித்து அக்ஷயா மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அக்ஷயா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீசுமா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 20-ஆம் தேதி சஜின் செல்போனில் என்னை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சஜினை கைது செய்தனர்.

Categories

Tech |