Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 வருடமாக வரன் தேடிய தந்தை…. நர்ஸ் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சில்லாங்காட்டு வலசு பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா(27) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக நடராஜ் தனது மகளுக்கு வரன் பார்த்து வந்துள்ளார். ஆனாலும் இந்திராவுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த இந்திரா தனக்கே திருமணமே வேண்டாம் என தனது தந்தையிடம் கூறி வந்துள்ளார். நேற்று முன்தினம் இந்திரா திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று இந்திராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |