Categories
மாநில செய்திகள்

உடனே அத ஒடுக்குங்க…. இல்லனா மத்திய அரசு தலையிடும்…. அப்புறம் சிக்கல் தான்…. DMK-வுக்கு‌ BJP வார்னிங்……!!?

திருப்பூர் வித்யாலயம் பகுதியில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பாஜக கட்சியின் மூத்த தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, கோட்டையில் இருப்பவர்கள் பயங்கரவாத செயல்களை கண்காணிக்க வேண்டும். ஆனால் அவர்கள் பயங்கரவாத செயல்களை கண்காணிக்க தவறி விட்டதால் கோட்டை ஈஸ்வரன் தான் தீபாவளி அன்று பொது மக்களை காப்பாற்றியுள்ளார். அதன் பிறகு அந்த இடத்திற்கு டிஜிபி வருகிறார்.

திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மிகச்சிறந்த அதிகாரிகளை நியமித்துள்ளது. தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக செயல்படுகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை‌. ஆனால் ஸ்காட்லாந்து காவல்துறையினர் தமிழகத்திற்கு வந்தாலும் அதிகாரிகளுக்கு அடிபணிந்து செல்ல வேண்டிய நிலை தான் தற்போது இருக்கிறது.

தற்போது இருக்கும் அரசு தீவிரவாத செயல்களை மூடி மறைக்கிறது. இது தீவிரவாத வளர்ச்சியை ஊக்குவிப்பது போன்றதாகும். மத்திய அரசின் நடவடிக்கையால் தான் காஷ்மீரின் பெரும்பகுதி தற்போது அமைதி பூங்காவாக மாறியிருக்கிறது. இதேபோன்று தமிழக அரசும் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகளை தீவிர‌ படுத்த வேண்டும். காவல்துறையினர் எடுப்பார் கைப்பிள்ளை ஆக இருக்கக் கூடாது. பறிமுதல் செய்யப்பட்ட வெடி மருந்துகளை ஒளிவு மறைவு இல்லாமல் மக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும்.

இதுதான் தமிழகம் அமைதி பூங்காவாக மாறுவதற்கான ஒரே வழி. அதிகாரிகளுக்கு முதலில்  சுதந்திரம் கொடுத்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். தமிழகத்தின் வளர்ந்து வரும் இரண்டாவது பெரிய மாவட்டமாக இருக்கும் கோயம்புத்தூரில் நடைபெறும் தாக்குதல்கள் அனைத்தும் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைப்பதற்கான உள்நோக்கம் ஆகும். எனவே தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய அரசு தலையிட வேண்டி இருக்கும். மாநிலத்தின் சுய ஆட்சி என்ற பெயரில் தீவிரவாத செயல்களை ஊக்கப்படுத்த கூடாது.

தமிழக உளவுத்துறை ஆனது இதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். தமிழக டிஜிபி சிறிய அளவில் தான் வெடிமருந்துகள் தயாரிப்பதாக கூறினார்‌. 1.5 லட்சம் டன் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் காவல்துறை வெடி  மருந்தின் அளவை வெளியிடவில்லை. இதை மூடி மறைப்பது எதற்காக? மேலும் வரலாற்று தவறுகளை திருத்திக் கொள்ளமால் இருக்கும் கட்சி திமுக என்று கூறியுள்ளார்.

Categories

Tech |