Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோபி பச்சைமலை சுப்ரமணியசாமி கோவில்…. “வருகின்ற 30-ஆம் தேதி சூரசம்ஹாரம்”….!!!!!!

கோபி பச்சைமலை சுப்ரமணியசாமி கோவிலில் வருகின்ற 30ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பச்சைமலை சுப்பிரமணிய கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா ஆரம்பமானது. இதை அடுத்து இன்று காலை 07.30 மணிக்கு சத்துரு சம்கார திரிசதை அர்ச்சனையும் காலை 10.00 மணிக்கு சஷ்டி விரதம், காப்பு கட்டுதலும், யாகசாலை பூஜை தொடங்குதல் நிகழ்ச்சியும் மதியம் 12 மணிக்கு ஷண்முகர் அர்ச்சனையும் நடைபெற்றது. வருகின்ற 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் தங்கமயில் தங்கரத புறப்பாட நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.

வரும் 30ஆம் தேதி காலை 6 மணிக்கு ஹோமம் அபிஷேக ஆராதனை நடைபெற இருக்கின்றது. காலை 9 மணிக்கு சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி மதியம் 12 மணியளவில் நடைபெற உள்ளது. இதன் பின் முருகப்பெருமானுக்கு பன்னீர் அபிஷேகமும் மாலை 6 மணிக்கு சண்முகர் அர்ச்சனையும் நடைபெற இருக்கின்றது. பின் 31-ம் தேதி காலை 9 மணி அளவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகின்றது. பின் 12 மணியளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட இருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |