Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஐந்து நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ராமநாதபுரம், நெல்லை, தென்காசி ,தூத்துக்குடி ,தேனி ,கன்னியாகுமரி ,சிவகங்கை ,திண்டுக்கல் ,விருதுநகர் ,மதுரை, தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி ,கோவை, திருப்பூர், காரைக்கால் ஆகிய 18 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் எனவும் சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |