தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது twitter பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அதில்,கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர் டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தைச் சுட்டிக் காட்டிய பத்திரிக்கையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம்.இந்த விற்பனையின் மூலமாக தனக்கு கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்து விடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா? சாராயம் விற்று பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரம் இருந்தால்,மாத சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும்?கோபாலபுரத்தின் குடும்ப தொலைக்காட்சியான சன் நியூஸ் இந்த சாராய விற்பனை மூலம் வந்த வருமானத்தை செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.
அவர்கள் மீது நீங்கள் வழக்கு போட முடியுமா?அவர்கள் மீது வழக்கு தொடுத்தாலும் உங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக பாஜக குரல் கொடுக்கும். ஒரு பத்திரிக்கையாளர் செய்தி வெளியிடுவதற்கு முன்பு அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்ததாக வேண்டுமென்ற கட்டாயம் இருந்தால் பத்திரிகையாளர்களை விட்டுவிட்டு என் மீது வழக்கு தொடுங்கள்.சாராய அமைச்சரின் இந்த நடவடிக்கை முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின் பெயரில் நடந்ததா அல்லது சாராய அமைச்சரே தன்னிச்சையாக இப்படி செயல்பட்டார் என அண்ணாமலை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.