Categories
அரசியல்

ஓ பன்னீர்செல்வத்தின் அடுத்த அதிரடி நடவடிக்கை… கடுப்பான எடப்பாடி பழனிசாமி…!!!!

சுமார் 4 வருடங்களுக்குப் பின் அதிமுகவில் ஒற்றை தலைமை உருவாகி இருக்கிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை மாநகரத்தில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம் நீதிமன்றம் போன்றவற்றில் முறையீடு செய்துள்ளார்.

இருப்பினும் இதுவரை நடைபெற்ற சட்ட போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கியுள்ளது. இதற்கிடையே நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமான நிகழ்வுகள் அரங்கேறியது எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிருப்தி அடைய செய்துள்ளது. மேலும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்திலும் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவான நிகழ்வுகள் நடைபெற்று உள்ளது. இந்த சூழலில் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் பொருளாளராகவும் தானே இருப்பதாகவும் விரைவில் அதிமுக தனது கட்டுப்பாட்டிற்குள் வரும் என்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாகிவிடும் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதற்கான காரணம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் குறிப்புகளின் படி அதிமுக ஒருங்கிணைப்பாளராக தற்போது வரை ஓ பன்னீர்செல்வம் தொடர்கிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். அதிமுக பொது குழு வழக்கில் ஒருவேளை தீர்ப்பு மாறி வந்தாலும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தான் கட்சிகளின் அங்கீகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் என்ற காரணத்தினால் டெல்லி ஆதரவோடு தேர்தல் ஆணையத்திலும் போராட ஓ பன்னீர்செல்வம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. மேலும் நீதி மன்ற தீர்ப்புக்கு பின் அதிமுகவில் பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் அரங்கேறக்கூடும். ஓ பன்னீர்செல்வத்தின் அடுத்த நடவடிக்கைகள் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கலக்கமடைய செய்திருக்கிறது.

Categories

Tech |