உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக கூகுள் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை. இந்த கூகுள் நிறுவனம் பயனாளர்களுக்கு பல்வேறு விதமான ஆப்ஷன்களையும், வசதிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனக்கு சந்தையில் இருக்கும் மதிப்பை வைத்து தன்னுடைய பேமெண்ட் வங்கி செயலி மற்றும் செயலி வழி பேமென்ட் போன்றவற்றை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை கூகுள் நிறுவனத்துக்கு மத்திய அரசானது 337 கோடி அபராதம் விதித்தது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் 937 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை மத்திய தொழிலக போட்டி ஆணையம் விதித்துள்ளது. மேலும் ஒரே வாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு 2274 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது