Categories
Tech டெக்னாலஜி

“12 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச்”….. ஆப்பிள் நிறுவனத்தின் வேற லெவல் கண்டுபிடிப்பு…..!!!!

பிரபலமான ஆப்பிள் நிறுவனமானது வெறும் டெக்னாலஜியாக மட்டுமின்றி தற்போது மனிதர்களின் உயிர் காக்கும் நிறுவனமாகவும் மாறிவிட்டது. அதாவது ஆப்பிள் நிறுவனமானது ஸ்மார்ட் ஜவாட்ச் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஆப்பிள் வாட்ச் SE, watch 7, watch 8, watch ultra போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இமானி மைல்ஸ் (12) என்ற சிறுமி ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றினை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த சிறுமிக்கு அடிக்கடி இதய துடிப்பு அதிகரித்துள்ளது.

இதை ஸ்மார்ட் வாட்ச் எச்சரித்துக் கொண்டே இருந்துள்ளது. இதன் காரணமாக சிறுமியின் தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதித்துப் பார்த்ததில் இதயத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த சிறுமிக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்யப்பட்டு புற்றுநோய் கட்டியானது அகற்றப்பட்ட நிலையில் தற்போது சிறுமி நலமுடன் இருக்கிறார். ஒருவேளை இன்னும் காலதாமதமான நிலையில் தெரிய வந்திருந்தால், சிறுமியின் உயிரை காப்பாற்றவே முடியாது என்று மருத்துவர்கள் சொன்னதாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சமீபத்தில் கூட ஒரு மூதாட்டிக்கு இதயத்துடிப்பு குறைவாக இருப்பதை ஆப்பிள் வாட்ச் காட்டி கொடுத்து அவரின் உயிரை காப்பாற்றியது‌. மேலும் இது போன்ற பல மருத்துவ சாதனைகளை ஆப்பிள் நிறுவனம் செய்து வருவதால் ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் நடப்பாண்டில் நல்ல லெவலில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக அதற்கு ஐ போன் இருக்க வேண்டும்.

Categories

Tech |