Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. தீபாவளிக்கு ரிலீசான எம்.ஜி.ஆரின் ஹிட் படம்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

தீபாவளிக்கு எம் ஜிஆரின் சூப்பர் ஹிட் படத்தை திரையரங்கில் மீண்டும் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் எம். ஜி. ஆர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியடையும். இன்றளவும் இவரின் படங்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறது.

இதனையடுத்து, இந்த வருட தீபாவளிக்கு கார்த்தி நடிப்பில் ‘சர்தார்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரின்ஸ் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. மேலும் சர்தார் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனமும் வந்து கொண்டு உள்ளன.

தீபாவளிக்கு வெளியான எம்ஜிஆரின் ரிக்ஷாக்காரன் Entertainment பொழுதுபோக்கு

இந்நிலையில், இந்த வருட தீபாவளிக்கு மதுரையில் உள்ள பிரபல திரையரங்கில் எம். ஜி. ஆர் நடித்த சூப்பர் ஹிட் படத்தை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இவர் நடித்த ரிக்ஷாக்காரன் திரைப்படத்தை மீண்டும் வெளியிட்டுள்ளனர்.

புதுப்படங்களுக்கென்று ரசிகர் கூட்டம் தியேட்டருக்கு சென்றாலும் பழைய படங்களை பார்ப்பதற்கும் ரசிகர் கூட்டம் இருப்பதால் இந்த படம் நேற்று வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. மேலும், இவரின் ரசிகர்கள் பேனர்கள் கட்டி இந்த படத்திற்கு வரவேற்பும் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |