Categories
தேசிய செய்திகள்

எங்கே போனது மனிதம்….? உயிருக்கு போராடிய சிறுமியை வீடியோ எடுத்த கும்பல்….. உபியில் அரங்கேறிய கொடூரம்…..!!!!!

உயிருக்கு போராடிய சிறுமிக்கு உதவாமல் சுற்றி நின்று வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ரத்த காயங்களுடன் 13 வயது சிறுமி ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த சிறுமி கைநீட்டி அருகில் இருந்தவர்களிடம் தனக்கு உதவி செய்யுமாறு கேட்கிறார். ஆனால் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் அந்த கூட்டம் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடும் சிறுமியை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிய பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‌மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு விதமான குற்ற கொடூர செயல்கள் அரங்கேறி வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அங்கு மனிதன் எங்கே போனது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |