இந்தியாவில் வருடம் தோறும் கோவா நகரில் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டில் 53-வது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த விருது வழங்கும் விழா நவம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த திரைப்பட விழாவின் போது இந்தியாவில் வெளியான சிறப்பான 25 திரைப்படங்கள் திரையிடப்படும். இந்த படங்களை தேர்வு செய்யும் குழுவில் 12 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இந்தியா முழுவதும் இருந்து வந்த 20 படங்களை தேர்வு செய்துள்ளனர்.
அதில் 3 தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி நடிகர் சூர்யாவின் ஜெய்பீம், எஸ். கமலக்கண்ணன் இயக்கத்தில் வெளியான குரங்கு பெடல், ரா வெங்கட் இயக்கிய கிடா ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தேசிய நீரோட்ட திரைப்பட பிரிவில் தி காஷ்மீரி பைல்ஸ், ஆர்ஆர்ஆர், அக்னி கோத்ரி உள்ளிட்ட 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படங்கள் ஏராளமான விருதுகளை குவித்து வருவதால், சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.