தெலுங்கானாவில் கல்லூரி விடுதியில் மர்மமாக உயிரிழந்த சிறுமிக்கு நீதிக்கோரி போராட்டம் நடத்திய தந்தையை காலால் எட்டி உதைத்த போலீஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் வெலிமெலாவில் தனியார் கல்லூரி ஓன்று இயங்கி வருகிறது. அந்த கல்லுரியில் படித்து வந்த 17 வயது சிறுமி சில நாட்களுக்கு முன் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அக்கல்லுரி நிர்வாகமும் அவள் தற்கொலை செய்து கொண்டதாக கூறி, குளிர்சாதனப்பெட்டியில் உடலை அடைத்து வெளியில் வைத்து விட்டனர். ஆனால் மாணவியின் பெற்றோர் இதனை மறுத்து, கல்லுரி நிர்வாகத்தின் அலட்சியமே மகளின் இறப்புக்கு காரணம் என்றனர்.
மேலும் ஒரு மணி நேரத்திற்கு முன் எங்களை அழைத்து கடும் காய்ச்சல் இருப்பதாக மகள் கூறியதாகவும், கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் தங்களிடம் பேசியதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவரது தந்தை போராட்டம் நடத்தினார். ஆனால் அவர்களை தடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல முயன்றனர்.
அப்போது மாணவியின் தந்தை குளிர்சாதன பெட்டியை எடுத்து செல்ல அனுமதிக்காமல் பிடித்து கொண்டே இருந்ததால் அதில் ஸ்ரீதர் என்ற காவலர் மாணவியின் தந்தையை தள்ளி விட்டு பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சியை பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கின்றது.
இதையடுத்து ஈவு இரக்கமின்றி காவலர் நடந்துகொண்டதாகபலரும் கண்டனம் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அந்த போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் எதிர்ப்பு வலுத்ததன் காரணமாக காவலர் ஸ்ரீதரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. சந்தனா தீப்தி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
https://twitter.com/umasudhir/status/1232649523672911872
కూతురు శవాన్ని చూడడానికి పోతే తన్నించుకోవడమేనా బంగారు తెలంగాణ..?
ఇందులో మీ తప్పు లేకపోవచ్చు @KTRTRS గారు కానీ కాస్త పోలీసు శాఖ వారికి చెప్పండి ఎవరితో ఎలా నడుచుకోవాలో.
కన్నా కూతురు చనిపోతే ఎవరు కూడా తట్టుకోలేరు సర్ కాస్త ఆలోచించి వ్యవహరించమనండి పోలీసులని.https://t.co/e20o66As0Z
— భరత్ అనే నేను (@BharathAneNenu) February 26, 2020