வாரிசு திரைப்பட அனுபவம் குறித்து பிரபல சண்டை பயிற்சி இயக்குனர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தயாரிக்கின்றது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு உறுதி செய்தது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள். இந்த நிலையில் பிரபல சண்டை பயிற்சி இயக்குனர் சுப்பராயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு திரைப்பட அனுபவம் குறித்து பதிவிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தெறி திரைப்படத்திற்கு பிறகு விஜய் உடன் பணிபுரிந்து இருக்கின்றேன். இத்திரைப்படத்தில் ஜாலியான அதே நேரம் அதிரடியான சண்டை காட்சிகள் இருக்கின்றது என குறிப்பிட்டு இருக்கின்றார்.