தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இவரின் அனைத்து படங்களும் நல்லை வெற்றியை பெற்று வருகிறது. இவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர். பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். தந்தைக்கு மகனுக்கு இடையில் சில மன கசப்புகள் இருப்பதால் இருவரும் பேசாமல் இருக்கின்றனர். சமீபத்தில் எஸ்.ஏ.சியின் பிறந்தநாள் விழாவில் விஜய் கலந்து கொள்ளாது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் தனது மகனை விட்டுக் கொடுக்காத எஸ்.ஏ.சி இதெல்லாம் தந்தை மகன் விவகாரம் எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் எஸ்.ஏ. சந்திரசேகர் குறித்து அளித்துள்ள பேட்டி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில், எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான சுக்ரன் படம் துவங்கப்பட்ட போது முதலில் அதில் விஜய் நடிப்பதாக இல்லை. அவருக்கு ஆர்வமும் அப்போது இல்லை. பிறகு எஸ்.ஏ. சந்திரசேகர் கதை கூறிய போது, அந்த கதை அவருக்கு பிடித்ததால் ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்தாராம். இதனால் விஜய் சம்பந்தமான காட்சிகளை வேகமாக எடுத்துவிட்டாராம் எஸ்.ஏ.சந்திரசேகர் அப்போது இந்த படத்தோடு நீங்கள் ஓய்வு பெறுங்கள் அப்பா. ஜப்பான், சைனா, லண்டன் போன்ற நாடுகளுக்கு அம்மாவை அழைத்துக்கொண்டு சுற்றுப்பயணம் சென்று வாருங்கள் என்று விஜய் அக்கறையுடன் கூறியுள்ளார். அதற்கு அவர், நான் சினிமாவில் இல்லை என்றால் சோர்வடைந்து விடுவேன். சினிமாவில் இருந்தால் தான் என்னால் உற்சாகமாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார். அவர் அவ்வாறு கூறி 15 ஆண்டுகள் மேலாகியும் இன்று படம் இயக்கிக் கொண்டிருக்கிறார் என தனது இயக்குனர் குறித்து எம்.ராஜேஷ் பெருமையுடன் கூறியுள்ளார்.