Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. ரயில் மோதி 3 தொழிலாளிகள் பலி… பதற வைக்கும் சம்பவம்….!!!

டெல்லியில் உள்ள சிராஸ்பூர் ராணா பூங்கா பகுதியில் முகமது ஹபீஸ், முகமது, ரியாஸ் மற்றும் இசானன் ஆகிய 4 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் பத்லி என்ற தொழிற்பேட்டையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 4 பேரும் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பத்லி யார்டு-ஹலாம்பி என்ற இடத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் எதிர் திசையில் இரண்டு ரயில்கள் வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளிகள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். அப்போது இசான் மட்டும் இரண்டு தண்டவாளங்களுக்கும் இடையே உட்கார்ந்து கொண்டார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். மற்ற மூன்று பேரும் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். ஆனால் அதற்குள் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் முகமது ஹபீஸ், முகமது, ரியாஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |