Categories
தேசிய செய்திகள்

“நாங்க தான் உண்மையான சிவசேனா”…. 2 லாரிகளில் ஆவணங்கள்….. தேர்தல் ஆணையத்தை திக்கு முக்காட வைத்த உத்தவ் தாக்கரே…..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி கடந்த மாதம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. ஏனெனில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்னாத் ஷிண்டே, கட்சியை விட்டு விலகி பாஜகவுடன் கூட்டணி அமைத்து மராட்டிய முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார். சிவசேனா கட்சியில் உள்ள 56 எம்எல்ஏக்களில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு கொடுத்தனர். அதன் பிறகு மொத்தமுள்ள 18 எம்பிகளில் 12 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருக்கின்றனர். உத்தகவ் தாக்கரே பக்கம் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் ஆதரவு குறைவாக இருந்தாலும், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் யார் உண்மையான சிவசேனா என்ற வழக்கு நடந்து வருவதால் உத்தவ் தாக்கரே 2 லாரிகளில் பிரமாண பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை கொண்டு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் அனில் தேசாய் கூறியதாவது, சுமார் 11 லட்சம் ஆவணங்களை கட்சியினர் சேகரித்துள்ளனர். இந்த ஆவணங்கள் மற்றும் படிவங்கள் எப்படி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சில கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. 2.62 லட்சம் நிர்வாகிகளின் பிராமண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதோடு 8 1/2 லட்சம் உறுப்பினர்களின் படிவத்தையும் தாக்கல் செய்துள்ளோம். மேலும் சில மாவட்டங்களுக்கான பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய இருக்கிறோம் என்று கூறினார் ‌

Categories

Tech |