Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்ல யாரு….. ஆதார் நம்பரை சொல்லுங்கம்மா….. சந்தேகத்தில் ஒன்று கூடிய தெரு….. 4 பேர் சிறைபிடிப்பு…..!!

கோவையில் ஆதார் அட்டை எண், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்டவற்றை சேகரிக்க முயன்ற  நான்கு பேரை பொதுமக்கள் சிறை பிடித்து பிடித்தனர்.

 கோயம்புத்தூர் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக முஸ்லிம்களும், பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்நிலையில் அது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்ற தகவல் வெளியான நிலையில், தங்களது பகுதிக்குள் மர்ம நபர்கள் யாரையும் விவரங்களை சேகரிக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. அந்த வகையில்,

கோட்டைமேடு பகுதியில் நேற்றைய தினம் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை விற்க வந்ததாக கூறி 7 பேர் கொண்ட கும்பல் அப்பகுதி பெண்களிடம் ஆதார் அட்டை எண், வாக்காளர் அட்டை எண் உள்ளிட்டவற்றை சேகரித்து வந்தனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அக்கம்பக்கத்தினர் ஐ அழைக்க தெருவே திரண்டு அவர்களை பிடிக்க முயற்சித்தது.  இதில் 3 பேர் தப்பி ஓட இரண்டு பெண்கள் 2 ஆண்கள் மாட்டிக்கொண்டனர்.

பின் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் ஊர் மக்களால் சிறைபிடிக்கப்பட்ட 4 பேரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், அவர்கள் வில்சன் கேர் என்ற தனியார் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்டவர்கள் என்பதும்,

அவர்கள் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை தான் விற்க வந்தார்கள் மாதத் தவணையை செலுத்துவதற்காக வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட எண்களை சேகரித்ததாக தெரிவித்தனர். இதையடுத்து விசாரணைக்கு பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |