திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ஏற்கனவே கடந்த மாதம் நான் பேச வேண்டிய ஒரு கூட்டம். திடீர் உடல்நல குறைவால் என்னால் வர இயல முடியவில்லை என்று சொன்னாலும், அதையும் மனதில் வைத்து அண்ணன் என்னை பார்க்கும் போதெல்லாம், ஒரு கூட்டம் பாக்கி இருக்கிறது என்று சொல்லி, சொல்லி இன்றைக்கு என்னை அழைத்து வந்திருக்கிறார்.
ராமன் தெரும், யானை கவுணி என்கின்ற பகுதி இந்த கூட்டம் நடக்கிறது, யானை கவுணி என்று இடம் எதற்கு பெயர் பெற்றது ? என்று சொன்னால் இந்த இடத்தில் யானைக்கு போர் பயிற்சி கொடுப்பார்கள், அதற்கு ஒரு பயிற்சி வழங்கக்கூடிய ஒரு இடமாக இருந்தது என்று சொல்கிறார்கள். யானைக்கு பயிற்சி வழங்கிய இடம் என்று சொல்லும்போது, இங்கேயும் ஒரு யானை மேடையில் அமர்ந்திருக்கின்றது.
அந்த யானை தன்னோடு உழைக்கக்கூடிய மற்ற குட்டி யானைகளுக்கு அந்த யானை இன்றைக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த வருகின்ற புதிய சமுதாயத்தை நாம் எப்படி உருவாக்க வேண்டும் ? ஒரு தலைவனுக்கு பின்பு நாம் எப்படி அணிவகுத்து நிற்க வேண்டும் ? எப்படிப்பட்ட கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் ? என்று அந்த யானை பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த யானைக்கு இன்னொரு யானை ஒன்று இருக்கிறது, ஆசானாக ஒரு யானை இருக்கும். அந்த யானை இன்றைக்கு ஒட்டுமொத்தமாக இந்த தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற ஒரு யானை.
அந்த யானைக்கும் மதமும் உண்டு, சாதியும் உண்டு, அது என்ன மதம் ? என்ன சாதி ? என்று சொன்னால் அந்த யானையினுடைய மதம் திராவிட கழகம், சாதி திராவிட முன்னேற்றக் கழகம். ஆக அதில் நாம் ஒவ்வொருவரும் அணி சேர்ந்து நம்முடைய பணியை ஆற்ற வேண்டும் என்கின்ற வகையில் தான், தொடர்ந்து அவரைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து அவரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால்,
ஒட்டுமொத்தமாக நம்முடைய தமிழினத்தை பற்றி பேசுவதற்கு சமம். ஒட்டுமொத்தமாக நம்ம மொழியை பற்றி பேசுவதற்கு சமம், ஒட்டுமொத்தமாக இந்த சமுதாயத்தை பேசுவதற்கு சமம். அப்படிப்பட்ட நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைப் பற்றி பேசுகின்ற ஒரு கூட்டம் இந்த கூட்டம் என பெருமிதம் தெரிவித்தார்.